மீண்டும் நாடு முழுவதும் ஆயுதப்படைகளை களமிறக்க உத்தரவிட்ட ரணில்!

இலங்கையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவென தெரிவித்து மீண்டும் சிறிலங்கா இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அதிபர் ரணில் விக்ரம சிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரம சிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நடைமுறை

மீண்டும் நாடு முழுவதும் ஆயுதப்படைகளை களமிறக்க உத்தரவிட்ட ரணில்! | Sri Lanka Law And Order Army President Ranil

 

இதன்படி இன்று வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாட்டின் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதற்காகவென தெரிவித்து கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆயுதப்படைகளுக்கு அழைப்பு

மீண்டும் நாடு முழுவதும் ஆயுதப்படைகளை களமிறக்க உத்தரவிட்ட ரணில்! | Sri Lanka Law And Order Army President Ranil

 

இந்நிலையில், சிறிலங்கா அதிபர் மீண்டும் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 வது பிரிவைப் பயன்படுத்தி ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணி அம்பிகா சத்குணநாதன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.