ரயில் டிக்கெட் கட்டண அதிகரிப்புக்கான காரணம் இதுதான் -அமைச்சர் பந்துல..

ரூ.260 கோடி வருவாயில் ரூ.230 கோடி OT செலுத்தப்பட்டது

கடந்த வருடம் முழு திணைக்கள ஊழியர்களின் சம்பளத்திற்காக எழுநூறு கோடி ரூபா செலவிடப்பட்டதே ரயில் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டமைக்குக் காரணம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


அந்த ஆண்டு ரயில்வே திணைக்களத்தின் வருமானமான இருநூற்று அறுபது கோடி ரூபாவில் மேலதிக நேர கொடுப்பனவாக இருநூற்று முப்பது கோடி ரூபா செலுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ரயில்வே திணைக்களத்தின் வருமானம் 2.6 பில்லியன் ரூபா. ஊழியர் மேலதிக நேர கொடுப்பனவுக்காக மட்டும் 2.3 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. சம்பளத்திற்கு ஏழு பில்லியன் ரூபா. இப்படி ஓர் அமைப்பை நடத்த முடியுமா? செய்ய முடியாது. அதனால்தான் கட்டணம் உயர்த்தப்பட்டது. வருமானத்துக்கேற்ப செலவுகளை நிர்வகிப்பதில்லை என்றால் சோகம்தான். அரசாங்கத்தின் மொத்த வரி வருவாயில் எண்பத்தாறு வீதம் ஊழியர் சம்பளமாக செலுத்தப்படும் ஒரே நாடு இலங்கை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்