சிறிலங்காவிற்கு மற்றுமொரு தலையிடி..! ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானம்

இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்துள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்ற 51வது மனித உரிமைகள் கூட்டத்தொடருடன் இணைந்து இலங்கை தொடர்பான இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட கால அவகாசம்

சிறிலங்காவிற்கு மற்றுமொரு தலையிடி..! ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானம் | Human Rights Council Sri Lanka Resolution Geneva

மனித உரிமைகள் பேரவை செயலகத்தில் முறைப்படி கையளிக்கப்பட்ட இந்த தீர்மானத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளன.

இந்தத் தீர்மானத்தில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடி, உணவுப் பாதுகாப்பு, உணவு, மருந்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்றவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

 

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற புதிய தலைப்பில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.