கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு மது போதையில் வந்த உதவி அதிபரால் முரண்பாடு!

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடைமையாற்றும் உதவி அதிபர் ஒருவர் மது போதையில் பாடசாலைக்கு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மது போதையில் வந்தாலும் தனது கடமைகளை செவ்வேன நிறைவேற்றி இருந்தார். எனினும் திடீரென அவர் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக உந்துருளியில் ஏறியுள்ளார்.

ஆனால் உந்துருளியை இயக்க முற்பட்ட போது அவரது உடல் கட்டுப்பாட்டினை இழந்து கீழே விழுந்துள்ளார்.

 

பெற்றோர்கள் அதிபருடன் முரண்பாடு

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு மது போதையில் வந்த உதவி அதிபரால் முரண்பாடு! | School Teacher Drunk Went School

இந்நிலையில், கீழே விழுந்த குறித்த ஆசிரியரை,  பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தூக்கும் வேளையிலேயே அவர் மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

அதேநேரம் பாடசாலையில் பெற்றோர்களுக்கான மாதாந்த கூட்டமும் நடைபெறவிருந்தமையினால் பெற்றோர்களும் பாடசாலைக்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் போது, உதவி அதிபரின் செயலை கண்டித்து பெற்றோர்கள் அதிபருடன் முரண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.