மாலைதீவுடன் குற்றவியல் விவகாரங்களில் இலங்கை ஒப்பந்தம் செய்யவுள்ளது

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் பரஸ்பர சட்ட உதவிகள் தொடர்பில் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள நீதி, சிறைச்சாலை செயற்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் ஒருங்கிணைந்த விசாரணைகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் தடைகளைத் தவிர்க்க உதவும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர உறவுகளை வளர்க்க உதவும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்