சீன அரசாங்கத்தால் மீண்டும் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்ட உதவி!

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிய விசேட சரக்கு விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.

மருத்துவ உபகரணங்கள் ஏற்றிய இந்த சரக்கு விமானம் இன்றுவந்தடைந்துள்ளது.

இலங்கையில் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு புதிய தொகுதி மருந்து வகைகளை சீனா வழங்கியுள்ளது.

சீனாவின் உதவி

சீன அரசாங்கத்தால் மீண்டும் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்ட உதவி! | China Gave Medicine To Sri Lanka Dollar

 

650 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து வகைகளை சீனா, இலங்கை மக்களுக்கென வழங்குவதாக சிறிலங்காவுக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் சீனா இதனை வழங்குகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து பொருட்களை ஏற்றிய விசேட சரக்கு விமானம் நேற்று இரவு சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து புறப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த விமானம் இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

மருந்து உபகரணங்கள்

சீன அரசாங்கத்தால் மீண்டும் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்ட உதவி! | China Gave Medicine To Sri Lanka Dollar

 

இதேவேளை, எதிர்வரும் மாதங்களில் மேலும் 5 பில்லியன் ரூபா பெறுமதியான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் சிறிலங்காவுக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்