பந்துல குணவர்தனவின் ரஷ்ய பயணத்திற்கு அரச நிதி பயன்படுத்தப்பட்டதா?

தனது சமீபத்திய ரஷ்ய பயணத்திற்காக அரச நிதியைப் பயன்படுத்தவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று உறுதியளித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தனது சொந்த செலவில் அண்மையில் தயாரித்த ‘த நியூஸ் பேப்பர்’ திரைப்படத்திற்கான சர்வதேச விருதைப் பெறும் நிகழ்வில் கலந்துகொண்டதாக தெரிவித்தார். .

இந்த பயணம் மிகவும் தனிப்பட்ட பயணம் என்பதால், அரச நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும், உத்தியோகபூர்வ பயணங்களின் போதும் தான் செலவிடும் பணம் தொடர்பில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாகவும், ஒரு அமைச்சர் என்ற வகையில், தனது சலுகைகளை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

படத்திற்கு 3,000 அமெரிக்க டொலர்கள் ரொக்கப் பரிசு கிடைத்ததாகவும் அதில் 1,500 அமெரிக்க டொலர்கள் இரு இயக்குநர்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் தனது படம் குறித்து பாராளுமன்றத்தில் நடந்த விவாதம் குறித்து சபாநாயகரிடம் தெரிவிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் சம்பவங்களும் துஷ்பிரயோகங்களும் இந்த நாட்களில் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தனிப்பட்ட விடயங்களை அரசியலுடன் குழப்புவது நியாயமற்றது என்றும், வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு பாத்திரங்கள் இருப்பதாகவும், அத்தகைய நடத்தை அவருக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்