போதைக்கு அடிமையாகிய யாழ் சிறுமி! மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த தகவல்

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர் மறுவாழ்வு நிலையத்துக்கு நேற்று அனுப்பப்பட்டார்.

அதேவேளை, குறித்த சிறுமி 08 மாதங்கள் கர்ப்பமாகவுள்ளார் என்றும் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் ஹெரோயினைப் பெறுவதற்காக பாலியல் நடத்தையில் ஈடுபட்டதாலேயே கர்ப்பம் தரித்தார் என்று மறுவாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

 

தாயார் வழங்கிய தகவல்

போதைக்கு அடிமையாகிய யாழ் சிறுமி! மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த தகவல் | Drugged School Girl Pregnant Jaffna

மேலும், சிறுமியின் தாயார் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அந்தச் சிறுமி இனங்காணப்பட்டு, மறு வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்