வனப்பாதுகாப்பு வலயமாக மாற்றப்படும் தமிழர் நிலங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, நந்திக்கடல், திருகோணமலை மாவட்டத்தின் சாம்பல்தீவு நீர்தடாகங்களை வனப் பாதுகாப்பு வலயங்களாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்லுயிர் வளம் மிக்க சாம்பல்தீவுக் குளத்தை வனப் பாதுகாப்பு வலயமாக மாற்றுவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

வனப்பாதுகாப்பு வலயமாக மாற்றப்படும் தமிழர் நிலங்கள் | Tamil Lands To Be Converted Into Forest Reserve

 விசேட குழு நியமனம்

 

நாயாறு மற்றும் நந்திக்கடல் குளங்களை மாற்றுவது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.

வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திர ஹேரத், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க ஆகியோர் தலைமையிலான குழுவில் வனஜீவராசிகள் திணைக்களம், விவசாய அமைச்சு மற்றும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளனர்.

வனப்பாதுகாப்பு வலயமாக மாற்றப்படும் தமிழர் நிலங்கள் | Tamil Lands To Be Converted Into Forest Reserve

 

இது தொடர்பில் 02 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்