வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு மற்றுமொரு அதிஷ்டம்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

18 தொடக்கம் 59 வயதுக்குட்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘மனுசம்’ எனும் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு மற்றுமொரு அதிஷ்டம் | Another Blessing For A Sri Lankan Working Abroad

வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபடுவது கட்டாயம்

 

மனுசவி ஓய்வூதியத் திட்டத்தில் பிரவேசிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபடுவது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு மற்றுமொரு அதிஷ்டம் | Another Blessing For A Sri Lankan Working Abroad

 

ஏற்கனவே வெளிநாட்டில் பணிபுரிந்து முறையான வகையில் நாட்டுக்கு பணம் அனுப்புபவர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்