மக்களின் தலையீடு இன்றி நடைமுறையான 20ஆவது திருத்தத்தினாலேயே அழிவடைந்தது நாடு!

நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களும் அச்சமின்றி வாழக்கூடிய வகையில் ஆட்சியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் தலையீடு இன்றி மேற்கொள்ளப்பட்ட 20ஆவது திருத்ததினால் நாடு அழிவடைந்து விட்டதாகவும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் சிறிலங்கா நாடாளுமன்றின் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

அ“டுத்த நாடாளுமன்ற அமர்வின் போது வாக்குறுதியளித்தபடி 19வது திருத்தச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளை உள்ளீர்க்க வேண்டும்.

மக்களின் தலையீடு இன்றி நடைமுறையான 20ஆவது திருத்தத்தினாலேயே அழிவடைந்தது நாடு! | Sri Lanka 19Th Constitution Parliament Government

அதுமட்டுமன்றி அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள நடைமுறைப்படுத்த வேண்டும்”.

மேலும் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்