இந்தியா – ஜப்பானுக்கு இலங்கை ஆதரவு !

ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்புரிமைப் பெற முயற்சிக்கும் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என்று இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புசபை, தற்போது, ஐந்து நிரந்தர உறுப்பினர்களையும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளையும் கொண்டுள்ளது.

நிரந்தர நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் செயற்படுகின்றன. இவை வீட்டோ அதிகாரத்தை கொண்டிருக்கின்றன. நிரந்தரமற்ற நாடுகள், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் இரண்டு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்தியாவும், ஜப்பானும் நிரந்தரமற்ற நாடுகளின் வகுதிக்குள் அங்கம் பெற்றுள்ளன.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் நிரந்தர உறுப்புரிமைக்கான முயற்சிக்கு தமது அரசாங்கம் ஆதரவளிக்கும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்தார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்க தற்போது ஜப்பான் சென்றுள்ளார்.

இந்தநிலையில் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர்  உடனான சந்திப்பின் போது, ரணில் விக்கிரமசிங்க, தமது கருத்தை வெளியிட்டார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்