அதியுயர் பாதுகாப்பு வலய வர்த்தமானியை மாற்றியமைக்க நடவடிக்கை

கொழும்பில் பல விசேட இடங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு பாதுகாப் வெளியிட்ட வர்த்தமானியை செல்லுபடியாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்த வர்த்தமானியை வெளியிட்டார்
எனினும், இந்த வர்த்தமானி மூலம் கொழும்பு நகரின் மத்திய பொருளாதார வலயத்தில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நீண்ட விளக்கமளித்துள்ளது.
இதற்கிணங்க, இந்த உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி அதற்கு பதிலாக புலனாய்வு அமைப்புகளை ஒருங்கிணைத்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு ஜனாதிபதி பொது பாதுகாப்பு அமைச்சின் தலைமையிலான சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
எனினும், இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதற்கு, ஜனாதிபதி கையொப்பம் இட வேண்டும், எனவே ஜனாதிபதி ஜப்பான் விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பிய பின்னர் இது மேற்கொள்ளப்படும் என நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.