இரவுப் பொருளாதாரம் என்பது விபசாரமல்ல -அமைச்சர் வெளியிட்ட தகவல்…

இரவுப் பொருளாதாரம் என்பது மக்கள் இரவில் வெளியில் சென்று மகிழ்ந்து அதன் மூலம் அரசாங்கத்திற்கு பணம் சம்பாதிப்பதே என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்துள்ளார்.

உலகில் எந்த நாடும் இரவுப் பொருளாதாரம் இல்லாமல் வளர்ந்த நாடு இல்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மக்கள் பகலில் சம்பாதிப்பதை செலவழிக்க நேரமும் இடமும் இல்லாவிட்டால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரவு 10:00 மணிக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வருவதில்லை, அவர்கள் தங்கள் அறைகளுக்குச் சென்று தூங்க மாட்டார்கள், அவர்கள் பணத்தை செலவழிக்க, நாட்டில் இரவு கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

இரவுப் பொருளாதாரம் என்பது விபசாரமல்ல என்று தெரிவித்த அவர் விபசாரத்தை இரவில் மட்டும் செய்வது இல்லை பகல் முழுவதும் செய்வதுதான் என்று மேலும் தெரிவித்தார்.

இரவுப் பொருளாதாரம் என்பது விபசாரமல்ல -அமைச்சர் வெளியிட்ட தகவல் | Prostitution Is Not Something Only At Night

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்