இயற்றாலை அ.மி.த.க பாடசாலை மாணவர்களுக்கு நன்னீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு……

இயற்றாலை அ.மி.த.க பாடசாலை மாணவர்களின் குடிநீர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு நன்னீர் சுத்திகரிப்பு இயந்திரம்  வழங்கும் நிகழ்வும் திறப்பு விழாவும் 28/9/2022 புதன்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அதிபர் திருமதி சி.தவசொரூபி தலைமையில் இடம் பெற்றது

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக மேஜர் ஜெனரல் விஜயசுந்தர  கொறியன்ற் பிரான்ஸ் ஒவ் கோட்ஸ் இன்ரநஷனல் நிறுவனத்தின் தலைவர் திரு திருமதி சங்கம் சோய் தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன் 52 ஆவது படைப் பிரிவின் கொமாண்டர் மேஜர் ஜெனரல் கேபிஎஸ்ஏ பெர்ணான்டோ கொறியன்ற் பிரான்ஸ் ஒவ் கோட்ஸ் இலங்கைக்கான செயலாளர் லலித நாணயக்கார  ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

15 இலட்சம் ரூபா பெறுமதியான நன்னீர் சுத்திகரிப்பு இயந்திரம் கையளிக்கப்பட்டது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்