எரிபொருட்களின் விலையை 100 ரூபாவால் குறைக்க முடியும்! வெளியாகிய மகிழ்ச்சி தகவல்

100 ரூபா

பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியனவற்றின் விலைகளை லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவினால் குறைக்க முடியும் என எரிபொருள், மின்சாரம் மற்றும் துறைமுக கூட்டு தொழிற்சங்கங்களின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் நடைமுறையிலுள்ள விலை சூத்திரம் மற்றும் உலக சந்தை விலைகளின் அடிப்படையில் இவ்வாறு லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவினால் விலையை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரி மற்றும் லாபங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்த விலை குறைப்பினை மேற்கொள்ள முடிந்த போதிலும் இலங்கை பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் ஐந்து சந்தர்ப்பங்களில் இதனை செய்யத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வரி வருமானத்திற்கு மேலதிக லாபம்

 

 

எரிபொருட்களின் விலையை 100 ரூபாவால் குறைக்க முடியும்! வெளியாகிய மகிழ்ச்சி தகவல் | Sri Lanka Fuel Price Reduced 100Rs

ஒரு லீட்டர் 95 ஒக்டேன் ரக பெட்ரோலில் 174 ரூபாவும், ஒரு லீட்டர் 92 ஒக்டேன் ரக பெட்ரோலில் 65 ரூபாவும், ஒரு லீட்டர் மண்ணெண்ணெய்யில் 85 ரூபாவும் அரசாங்கம் லாபமீட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த லாபமானது வரி வருமானத்திற்கு மேலதிகமானது என அவர் தெரவித்துள்ளார்.

தற்போதைய விலை சூத்திரத்தின் பிரகாரம் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் மக்களின் பணத்தை சுரண்டுவதாகவும் அரசாங்கம் அதற்கு உதவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.