முக்கிய இராணுவ உயர் அதிகாரிகளுக்கு எதிராக பிடிஆணை உத்தரவுக்கு தயாராகும் சர்வதேச நீதிமன்றம்!

போர்க்குற்றம் சுமத்தப்பட்ட முக்கிய உயர் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கமைய போர்க் குற்றம் சுமத்தப்பட்ட 58 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச பிடிஆணை பிறப்பிக்க சர்வதேச நீதிமன்றம் தயராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட், குறித்த இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணமொன்றை சர்வதேச நீதிமன்றின் வழக்கு பணிப்பாளர் கரீம் கானுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம்

முக்கிய இராணுவ உயர் அதிகாரிகளுக்கு எதிராக பிடிஆணை உத்தரவுக்கு தயாராகும் சர்வதேச நீதிமன்றம்! | United Nation Human Rights Army Arrest Warrant Sl

இவ்வாறான நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானமொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படவுள்ளது.

அதன் பின்னர் சர்வதேச சட்டங்களுக்கு அமைய சர்வதேச பிடிஆணை பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இதுவரையில் சிறிலங்காவிற்கு எதிராக இவ்வாறான சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழிவுகள் இடம்பெறவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.