ஜனாதிபதி ஒரு நகைச்சுவையாளர்!

தற்போதைய ஜனாதிபதி ​ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தள்ளாடும் பாலம் ஒன்றைக் கடக்க வேண்டியுள்ளதாகக் கூறினாலும், நாட்டிலுள்ள 220 இலட்ச மக்களையும் தள்ளாடும் பாலத்தின் கீழே தள்ளிவிட்டுவிட்டு, ராஜபக்சர்களும், அவர்களின் நெருங்கிய நண்பர்களுமே தள்ளாடும் பாலத்தை தற்போது கடந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி ஒரு நகைச்சுவையாளர் என்றும் தற்போதைய அரசாங்கம் சதிகார அரசாங்கம் எனவும் கூறிய எதிர்க்கட்சி தலைவர், மக்களுக்கு எதிராகச் செயற்பட்ட அனைவரும் வரலாற்று நெடுகிழும் மோசமான விளைவுகளுக்கு முகங்கொடுக்கவே நேரிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

புத்தல பிரதேசத்தில் நேற்று (28) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம்.தர்மசேன ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் புதிய மக்கள் ஆணையொன்று அவசியம் என்று தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், விரைவில் தேர்தலை நடந்துங்கள் என்றும் யானை, காக்கை வேடமிட்டு வந்தாலும் மக்கள் இந்தத் தடவை சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண,குறிப்பிட்ட சட்டகத்திற்கு வெளியே சிந்தித்து,புதிய முறைமைகளுக்கான அணுகலை பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கிரமாங்களுக்கு, நகரங்களுக்கு நாட்டிற்கு என பணியாற்றுவதற்கே ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியதிகாரத்தைப் கைப்பற்றும் எனவும், புதிய தொழில்நுட்பங்கள் ஊடாக குறைந்த செலவில் அதிகளவான இலாபத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும், கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தைப் போல் அல்லாது தான் உள்ளிட்டக் குழுவினர் எதிர்க்கட்சியிலிருந்த வன்னமே மக்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டதாகவும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், ராஜபக்சர்கள் பொய்களை கட்டமைத்து நாட்டை வக்குரோத்தடையச் செய்ததையே மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்