யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதிதிறந்துவைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.

அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்று காலை 9மணியளவில்
கடற்றொழில் அமைச்சர்
கே.என்.டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

பாடசாலை அதிபர் வாசுகி தவபாலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், யாழ்ப்பாண வலயக் கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்