உலகப் புத்தாக்கச் சுட்டெண்ணில் இலங்கைக்கு 85 ஆவது இடம்

உலகப் புத்தாக்கச் சுட்டெண்ணில் (GII) உலகத் தரவரிசையில் 85 ஆவது இடத்தையும், பிராந்தியத் தரவரிசையில் ஐந்தாவது இடத்தையும் இலங்கை பெற்றுள்ளது.

உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு (WIPO) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கை தனது கண்டுபிடிப்பு தரவரிசை 2021 இல் இருந்ததை விட 10 நிலைகளால் முன்னேற்றம் கண்டுள்ளது.

நாடு குறைந்த நடுத்தர-வருமானக் குழுவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் புதுமை மேம்பாடுகளைப் பொறுத்தவரை அபிவிருத்தி நிலைக்கு ஏற்ப செயற்படுகிறது.

“இலங்கை தரவரிசையில் மேலும் கீழும் சென்றுள்ளது, 2015 ஆம் ஆண்டில் 85 ஆவது இடத்தில் இருந்த நிலையில், மீண்டும் அதே நிலையை இவ்வாண்டு பெற்றுள்ளது” என GII 2022 அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையானது அதன் செயல்திறனை ‘எதிர்பார்ப்புக்குக் கீழே’ இருந்து ‘பொருந்தும் எதிர்பார்ப்புக்கு’ உயர்த்திய நான்கு பொருளாதாரங்களில் ஒன்றாக முன்னிலைப்படுத்தப்பட்டது. பங்களாதேஷ், எத்தியோப்பியா மற்றும் ஏமன் ஆகிய மூன்று பொருளாதாரங்கள் தங்கள் கண்டுபிடிப்பு நிலையை மேம்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.