முக்கிய அமைச்சர்கள் வசம் இருக்கும் துறைகளில் பாரிய மாற்றம்! ரணில் வருகையின் பின் நியமனம்

தற்போதுள்ள அமைச்சர்களின் பொறுப்பின் கீழ் இருக்கும் துறைகளில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது தற்போது அமைச்சர்களாக பதவி வகிக்கும் முக்கிய அமைச்சர்கள் பலரது துறைகளில் மாற்றங்கள் செய்யப்படும் என அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

அந்தவகையில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சு பதவிகளை வகிக்கும் அமைச்சர்களிடம் மேலதிகமாக இருக்கும் அமைச்சு பதவிகள் நீக்கப்படும்.

துறைமுகம், விளையாட்டுத்துறை, கைத்தொழில் துறை அமைச்சுக்களில் கட்டாயம் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

 

ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சு பொறுப்பு

முக்கிய அமைச்சர்கள் வசம் இருக்கும் துறைகளில் பாரிய மாற்றம்! ரணில் வருகையின் பின் நியமனம் | New Appointment Of Sri Lankan Ministers

ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, பந்துல குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சு பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.

இவர்களின் பொறுப்பின் கீழ் உள்ள துறைகள் குறைப்பட உள்ளன. அந்த துறைமுகள் புதிதாக நியமிக்கப்பட உள்ள அமைச்சர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அத்துடன் புதிதாக நியமிக்கப்பட உள்ள அமைச்சர்களில் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வெளிநாடு சென்றுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பிய பின்னர் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.