ஆப்கானில் தற்கொலைப் படைத் தாக்குதல் 19 பேர் பலி; 27 பேர் காயம்
ஆப்கானிஸ்தானின் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறுபான்மையினராகக் கருதப்படும் ஹசாராக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை