நள்ளிரவு முதல் குறைகிறது பெட்ரோல் விலை – சற்றுமுன் கிடைத்த தகவல்

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலை குறைக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, 92 ரக பெட்ரோலின் விலை லீட்டருக்கு 40 ரூபாயும், 95 ரக பெட்ரோலின் விலை லீட்டருக்கு 30 ரூபாயும் குறைக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 92 ரக பெட்ரோலின் விலை ரூ.410 ஆகவும், 95 ரக பெட்ரோலின் விலை ரூ.510 ஆகவும் குறைக்கப்படவுள்ளது.

 

ஏனைய எரிபொருட்களின் விலை

நள்ளிரவு முதல் குறைகிறது பெட்ரோல் விலை - விபரங்கள் இணைப்பு | Today The Price Of Petrol Has Decreased

இந்த விலை மாற்றமானது இன்று (01) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஏனைய எரிபொருட்களின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்