இலங்கையில் தாயை தேடி அலையும் பிரான்ஸ் யுவதி!

தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடித்து தருமாறு சிறுவயதில் பிரான்ஸ்க்கு தத்து பிள்ளையாக சென்ற பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த பெண் சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்து தத்து பிள்ளையாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

லோரேன் என்ற இந்த யுவதி தற்போது திருமணமான பெண். இதற்கு முன்னர் லோரேன் தனது பிரான்ஸ் கணவருடன் இலங்கைக்கு வந்த தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடிக்க முயற்சித்துள்ளார்.

எனினும் அவரால் தனது தாயை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடிக்க உதவுமாறு அவர் ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தொடர்பு இலக்கம்

இலங்கையில் தாயை தேடி அலையும் பிரான்ஸ் பெண்! | France Girl Who Misses Her Mother Sri Lanka

லோரேனிடம் தனது பிறப்பு தொடர்பில் குறைவான தகவல்களே உள்ளன. இதனடிப்படையில் அவர் கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி பிறந்துள்ளார்.

தாயாரது பெயர் நேன்சி பத்திரகே தயாவதி என லோரேனிடம் இருக்கும் பிறப்பத்தாட்சி பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, நேன்சி பத்திரகே தயாவதி என்ற பெண் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் எவராவது இருந்தால், அது பற்றி 0772114795 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிய தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.