இரவு வாழ்க்கையை கட்டியெழுப்பும் முயற்சியில் டயானா கமகே..

இலங்கையின் புதிய மற்றும் சற்றே சர்ச்சைக்குரிய சுற்றுலாத்துறை அமைச்சர் டயானா கமகே, சுற்றுலாப் பயணிகளை கவரும் முயற்சியின் ஒரு கட்டமாக கொழும்பின் இரவு வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான தனது திட்டங்களை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளார்.

EconomyNext உடன் பேசிய கமகே தெரிவித்த கருத்துக்கள் வருமாறு
பகல் நேரத்தில் வெளிநாட்டினரை ஆக்கிரமித்து வைத்திருக்கும் கலாச்சார இடங்கள் நிறைந்திருந்தாலும், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைப் போல் இரவு நேரத்தில் களியாட்டங்கள் பொழுதுபோக்குகள் எதுவுமில்லை என்று அவர் கூறினார்.

சுற்றுலாப் பயணிகள் ஷொப்பிங் செல்ல விரும்பினால், இரவில் எதுவும் திறந்திருக்காது. அவர்கள் நடனம், பாடுவது, இசை கேட்பது, குடிப்பது, சாப்பிடுவது என எதுவுமில்லை இலங்கை இரவில் இறந்த தீவு,” என்று கமகே கூறினார். பொழுதுபோக்கிற்கான விருப்பங்கள் இல்லாததால் வெளிநாட்டு நாணயம் வெளியேறுகிறது, செலவழிக்கக்கூடிய வருமானம் உள்ள உள்ளூர் மக்களும் தங்கள் பணத்தை செலவழிக்க வெளிநாட்டு இடங்களை நோக்கி செல்கின்றனர் . அதாவது இலங்கையர்களும் தங்கள் பணத்தை சேகரித்து, அதை டொலராக மாற்றி, மலேசியா, சிங்கப்பூர் அல்லது துபாய்க்கு செல்கின்றனர். அவர்கள் நமது பணத்தை மற்ற நாடுகளுக்கு கொடுக்கிறார்கள். ஏன்? ஏனென்றால் இலங்கையில் அவர்களுக்கு ரசிக்க எதுவும் இல்லை.
இரவு நேரத்தில் உணவுக் கடைகள்… ஷொப்பிங்… மக்கள் ரசிக்கக் கூடிய இசை என்பன இருக்க வேண்டும்.”

சிலர் இரவு வாழ்க்கையை கலாச்சாரம் மற்றும் மதத்தோடு சம்பந்தப்படுத்துகின்றனர், நம் கலாச்சாரம் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அங்கேயே நின்று ஒரு நாட்டின் வளர்ச்சியை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல.

ஒவ்வொரு முறையும் இந்த நாடு ஏதாவது ஒரு வகையில் வளர்ச்சியடைய முயற்சிக்கும் போது, ​​மக்கள் இந்த மதம் மற்றும் கலாச்சாரப் பிரச்சினையை முன்னோக்கி கொண்டு வந்துள்ளனர்… இன்று, அது நம்மை திவாலான நிலைக்கு கொண்டு வந்துள்ளது,” என்றும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்