மைத்திரியின் அடுத்த அதிரடி
துமிந்த திஸாநாயக்க அரசியல் குழுவிலிருந்து நீக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க அரசியல் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விரைவில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ள அமைச்சரவையில் துமிந்த திஸாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பதவிகளை இழக்க நேரிடும்
எனினும் அவ்வாறான அமைச்சுப் பதவி அவருக்கு கிடைத்தால் கட்சியின் தற்போதைய தேசிய அமைப்பாளர் பதவி, மத்திய குழு உறுப்புரிமை, அநுராதபுரம் மாவட்டத் தலைமை ஆகிய பதவிகளை இழக்க நேரிடும்.
இதேவேளை அரசாங்கத்தில் இணைந்து அண்மையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர், மாவட்ட தலைவர் மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, சாந்த பண்டார, சுரேன் ராகவன், சாமர சம்பத் தசநாயக்க, ஜகத் புஷ்பகுமார, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆகியோர் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை