கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை..!

கல்வி மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்களினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர மேலதிகமாக எதனையும் அறிவிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க அறிவித்துள்ளார்.

சிறுவர் மற்றும் ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்தோ அல்லது பெற்றோரிடமிருந்தோ பணம் அறவிடக் கூடாது என அறிவி்க்கப்பட்டுள்ளது.

 

முறையற்ற பணம் வசூலிப்பு

கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை..! | Special Notice Education Ministry Sri Lanka School

பாடசாலைகளில் முறையற்ற முறையில் பணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் 2015/5 ஆம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை வலியுறுத்திய கல்விச் செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான நிதி சிக்கல்களுக்கு மத்தியில் பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் திண்டாடுவதால் இதுபோன்ற பணச் செலவுகளை நிறுத்துவது அதிபர்களின் பொறுப்பு என அவர் தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்