காவல்துறையினரின் துப்பாக்கி சூடு குறி தவறியதில் உயிரிழந்த இளம் பெண்..!

காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த இளம் பெண் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை கம்பஹா- தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

காவல்துறையினரின் துப்பாக்கி சூடு குறி தவறியதில் உயிரிழந்த இளம் பெண்..! | Young Woman Killed In Police Firing In Sri Lanka

தங்கோவிட்ட பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைக்கு மகிழுந்தொன்றில் பிரவேசித்த சிலர், அங்கு கொள்ளையிட்டு தப்பியோட முயன்றுள்ளனர்.

இது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தங்கொவிட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று குறித்த இடத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்போது அவர்கள் தப்பியோட முயன்ற நிலையில், கொள்ளையர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின்போது, கலென்பிந்துனுவெவயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றின் மீதும், காவல்துறையினர் தற்செயலாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்

காவல்துறையினரின் துப்பாக்கி சூடு குறி தவறியதில் உயிரிழந்த இளம் பெண்..! | Young Woman Killed In Police Firing In Sri Lanka

அதில்,பேருந்தின் பின் ஆசனத்தில் இருந்த பெண் ஒருவர் படுகாயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர்கள் கொள்ளைக்காக வந்த மகிழுந்துடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.