மின்வெட்டு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

நாட்டில் மின்சாரத்தை தடை இன்றி வழங்குவது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாட்டில் மின்சாரத்தை தடை இன்றி வழங்கலாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

 

பழுதடைந்த இரண்டு மின் உற்பத்தி அலைகள்

மின்வெட்டு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்..! | No Power Cut In Sri Lanka From January Pucsl

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” அண்மையில் பழுதடைந்த இரண்டு மின் உற்பத்தி அலகுகளும் அடுத்த இரண்டு வாரங்களில் மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஒக்டோபர் இறுதிக்குள் நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிட்டதால் மின்வெட்டை நீட்டிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் நிலக்கரி கொள்முதலில் சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை தற்போது தினசரி இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைபடுகின்றதோடு அனல்மின்நிலையத்தில் உள்ள 3 வது அலகு எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின்தொகுப்புடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது “, எனக் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.