யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி..

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியானார். குறித்த நபர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தற்கொலை என சந்தேகிக்கப்படுவதுடன், உயிரிழந்தவர் 30 வயது மதிக்கத்தக்கவர் என ஆரம்பவிசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரிடம் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை என்பதுடன், பேருந்து பயணச் சீட்டு மாத்திரம் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்