உணவகங்களுக்கு விற்கப்படும் மனித பாவனைக்குதவாத அரிசி; இரண்டு ஆலைகளுக்கு சீல்..

பாவனைக்குதவாத அரிசியை விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த இரண்டு அரிசி ஆலைகள் சோதனையிடப்பட்டு பதினாறாயிரம் கிலோ அரிசி மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு ஆலைகளுக்கும் நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்டது .

அளுத்கம தர்கா நகரம் மற்றும் பேருவளையில் உள்ள அரிசி களஞ்சியசாலைகளே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தேசிய சுகாதார நிறுவகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பேருவளை பொலிஸ் விஷேட பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை தேசிய சுகாதார நிறுவக அதிகாரிகள் மற்றும் பேருவளை வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலையொன்றில் இருந்து கால்நடை தீவனத்திற்காக அளுத்கம பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அரிசி அங்கு சுத்தப்படுத்தப்பட்டு அளுத்கம, பேருவளை, மகொன பயாகல ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.