அதிகரிக்கப்போகும் எரிபொருளின் விலை! நாடாளுமன்றில் ரணில் அறிவிப்பு..

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பொன்றை அதிபர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (06.10.2022) ஆற்றிய விசேட உரையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, உலகளாவிய தாக்கம் காரணமாக எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பல தீவிரமான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நாம் பல தீவிரமான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்