பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணத்தை மோசடி செய்த பெண்..!

கொழும்பில் பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணம் மற்றும் தங்க நகைகளை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்தனர்.

கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் ஆடம்பரமான அலுவலகம் ஒன்றை நடத்திவந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து 226 மில்லியன் ரூபா பெறுமதியான இலங்கை பணத்தை மோசடியாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், 60,000 அமெரிக்க டொலர், 100,000 அவுஸ்திரேலிய டொலர் மற்றும் தங்க நகைகளையும் மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

 

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணத்தை மோசடி செய்த பெண்..! | Woman Cheated A Huge Amount Of Money Arrested

குறித்த பெண் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டு இன்று (06) கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், குறித்த பெண்ணை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளி நாடுகளில் பண வைப்பு மற்றும் வேறு தொழில்களில் பணத்தை வைப்பிலிடுவதற்கு இலாபகரமான பணத்தை வழங்குவதாக கூறி கொழும்பில் ஒரு நிறுவனம் ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.

அவரது நிறுவனத்தில் கோடீஸ்வர தொழிலதிபர்கள், மருத்துவர்கள் மற்றும் பலர் வைப்புகளை செய்திருப்பது தற்போதைய காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், வைப்பு செய்யப்பட்ட பணத்திற்கான வட்டியை செலுத்தாததால், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.