எரிபொருள் நிரப்ப வந்தவருக்கு ஏற்பட்ட நிலை! தீக்கு இரையாகிய உந்துருளி

வவுனியா ஹொரவபொத்தானை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த உந்துருளி ஒன்று திடீரென தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வருகை தந்த நபர் உந்துருளியை நிறுத்திவிட்டு எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்த நிலையில் உந்துருளி திடீரென தீப்பற்றிக்கொண்டுள்ளது.

 

தீப்பற்றியமைக்கான காரணம்

எரிபொருள் நிரப்ப வந்தவருக்கு ஏற்பட்ட நிலை! தீக்கு இரையாகிய உந்துருளி | Fuel Station Fire Accident

உந்துருளியில் வருகை தந்தவர் உந்துருளியில் இருந்து பாய்ந்து தன்னை பாதுகாத்துக்கொண்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடமையிலிருந்த ஊழியர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்