சரவணமுத்து நவராசசிங்கம் அவர்கள் 05-10-2022 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணம் கரவெட்டியில் இறைபதம் அடைந்தார்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Herzogenbuchsee, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும், யாழ். கரவெட்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து நவராசசிங்கம் அவர்கள் 05-10-2022 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணம் கரவெட்டியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதிகள், அம்பலவாணர் நல்லமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான புங்குடுதீவைச் சேர்ந்த சரவணமுத்து(கிளாக்கர்) பேரின்பம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கரவெட்டியைச் சேர்ந்த முருகேசு லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தினி(சுவிஸ்), கணேஸ்குமார்(சுவிஸ்), நந்தினி(சுவிஸ்), தர்சினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இந்திரன்(சுவிஸ்), கிருபாஜினி(சுவிஸ்), றிச்சாட்(சுவிஸ்), தர்மராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, பாலசுப்பிரமணியம், திருச்செல்வம் மற்றும் ராஜேஸ்வரி(Paris- பிரான்ஸ்), யோகேஸ்வரி(கனடா), விக்கினேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சீவரெத்தினம் மற்றும் பசுபதி, மகேஸ்வரி, சசிதேவி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மங்கேஸ்வரன், கந்தசாமி, நீலப்பிள்ளை, பொன்னம்மா, வள்ளிப்பிள்ளை, சரஸ்வதி, கனகசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாரணி, சாருஜன், ஆகாஷ், அபினேஷ், சந்தோஷ், ரிசி, சாமினி, ரோகினி, தரன், ஷாலினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் கரவெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரவெட்டி சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-

S. Navarasa
61 New Road
Karaveddy west
Karaveddy, Sri Lanka

தகவல்: குடும்பத்தினர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்