விவசாயத்துறை வீழ்ச்சியடைவதற்கான சாத்தியம்..

விவசாய ஆலோசகர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விதை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாய ஆலோசகர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாய ஆலோசகர்கள் கடந்த மே மாதம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

டொலர் பற்றாக்குறை காரணமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விதைகள் தடைப்பட்டுள்ளதோடு, விவசாய ஆலோசகர்களின் தொழிற்சங்க போராட்டத்தின் காரணமாகவும் எதிர்காலத்தில் இந்நாட்டின் விவசாயத்துறையில் பாரிய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்