ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிக மழை…

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் நாளை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாத்தறையிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை ஊடான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து கொழும்பு வரையான காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்