ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் நாளை முதல் வாரத்துக்கு இரு விமானங்களை இலங்கைக்கு இயக்கவுள்ளது
ரஷ்யாவின் நஷனல் ஏர்லைன் ஏரோஃப்ளோட் நாளை (ஒக்டோபர் 9ஆம் திகதி) முதல் வாரத்துக்கு இரண்டு விமானங்களை இலங்கைக்கு இயக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அஸூர் ஏர் விமான நிறுவனத்துக்கும் நவம்பர் தொடக்கத்தில் இருந்து வாரத்துக்கு நான்கு விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த முன்னேற்றமானது ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணிசமாக அதிகரிக்கும் என்றும், இலங்கையிலுள்ள ரஷ்யத் தூதரகம் மற்றும் ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் மூலம் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை