மனைவியை கொலை செய்த கணவன் தலைமறைவு -தமிழர் பகுதியில் சம்பவம் (படங்கள்)
மனைவியை கொலை செய்த கணவன்
மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி மாவிலங்கத்துறையில் மனைவி – கணவனால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆரையம்பதி மாவிலங்கத்துறையில் 7 பிள்ளைகளின் ராமன் சோதிமலர் என்ற 62 வயதுடைய தாயாரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டட்டவராவார்.
கணவன் தலைமறைவு
படுகொலை செய்ததாக சந்தேகிப்படும் 65 வயதுடைய கணவன் தலைமறைவாகியுள்ளதாக காத்தான்குடி காவல்நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எஸ்.தியாகேஷ்வரன் சடலத்தைப்பாபர்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார். காத்தான்குடி கால்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை