ஜனாதிபதி ரணிலின் செயற்பாடுகளுக்கு SLPP முழுமையான ஒத்துழைப்பு நல்கும்

களுத்துறையில் இடம்பெற்ற மாபெரும் நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சிக்காரரென அன்று விமர்சித்தோம், ஆனால் அவர் இன்று எம்முடன் ஒன்றிணைந்துள்ளதால் நல்ல விதமாக குறிப்பிடுகிறோம். அவர் தற்போது சரியான பாதைக்கு வந்துள்ளாரென எதிர்பார்க்கிறோம், ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்குமுழுமையான ஒத்துழைப்பு வழங்குவோமென முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

‘ஒன்றிணைந்து எழுவோம் -களுத்துறையில் ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளில் களுத்துறையில் சனிக்கிழமை (08) நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கட்சியும், நாங்களும் அரசியல் ரீதியில் உறக்கத்திலுள்ள போது களுத்துறையில் இடம்பெற்ற மாநாடு எமக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை மக்கள் நன்கு அறிவார்கள். புதிதாக குறிப்பிட வேண்டிய தேவையில்லை.   பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.நாடு என்ற ரீதியில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். அரசியல் ரீதியான நெருக்கடிகளுக்கு ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும். நெருக்கடிகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.