களனி பள்ளத்தாக்கு மார்க்கத்தில் ரயில் சேவைகள் வழமைபோல் முன்னெடுக்கப்படுகிறது

களனி பள்ளத்தாக்கு மார்க்கத்தில் வழக்கமான ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

கொஸ்கம மற்றும் அவிசாவளை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாலம் புனரமைக்கப்படுவதால் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து புறப்படும் புகையிரதங்கள் கொஸ்கம வரை மட்டுப்படுத்தப்பட்டது.

புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து அவிசாவளைக்கு ரயில் ஒன்று புறப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இன்று காலை முதல் வழக்கமான கால அட்டவணைப்படி ரயில்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.