காலிமுகத்திடலில் மீண்டும் குழப்பம் – ஊடகவியலாளர்களுடன் முரண்பட்ட காவல்துறை!
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டம் இன்றைய தினம் மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்த விதம், அங்கிருந்த சிறார்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு கீழ் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே சட்டத்தரணிகள் சங்கம் அமைதி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
வாக்குவாதம்
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் காவல்துறையினரும், சட்டத்தரணிகளின் போராட்டத்தில் கலந்து கொண்ட இளம் ஊடகவியலாளர் சங்கத்தினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினர் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு காலிமுகத்திடல் வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை