போதைவஸ்து கொடுத்து பாலியல் வன்புணர்வு..! 72 வயது முதியவர் கைது – ஐபிசி தமிழ்

தன்னை மாந்திரீகர் என அடையாளப்படுத்தி பெண் ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய நபரொருவரை கொஸ்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை களுஅக்கல, வக பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனது மாந்திரீகம் எப்போதும் பிழைக்காது என்று முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் பிரகாரம் பெண்ணொருவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று, போதை பானத்தைக் கொடுத்து, நிர்வாணமாக்கி, புகைப்படம் எடுத்து பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குறித்த பெண் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

பூஜையை நடத்த திட்டம்

போதைவஸ்து கொடுத்து பாலியல் வன்புணர்வு..! 72 வயது முதியவர் கைது | Witch Who Molested A Woman

தன்னை விட்டு பிரிந்து வாழும் கணவனை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக மாந்திரீகம் செய்ய விரும்புவதாக கூறியதையடுத்து சந்தேக நபருக்கு அந்த பெண்ணின் தொலைபேசி இலக்கம் கிடைத்துள்ளது.

குறித்த பெண்ணை பூஜை ஒன்றில் கலந்து கொள்ளுமாறு கூறிவிட்டு சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குருநாகல், கும்புக்கெட்டே பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இது தொடர்பான பூஜையை நடத்த சந்தேகநபர் திட்டமிட்டு பெண்ணை அவிசாவளை பகுதிக்கு வருமாறு கூறி பெண்ணை தேவாலயம் அமைந்துள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

காவல்துறையினர் விசாரணை

போதைவஸ்து கொடுத்து பாலியல் வன்புணர்வு..! 72 வயது முதியவர் கைது | Witch Who Molested A Woman

இது தொடர்பான பூஜையில் மற்றவர்கள் பங்கேற்பார்கள் என்றும், இரவு வெகுநேரமாகியும் வேறு யாரும் வராததால், தான் செல்வதாக கூறி அப்பெண் குடிக்க தண்ணீர் கேட்டபோது, சந்தேககநபர் போதை கலந்த பானத்தை வழங்கியுள்ளதாகவும், இதை அருந்தியுள்ள பெண் மயக்கத்தில் உறங்கிவிட்டதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கண்விழித்த போது நிர்வாணமாக்கப்பட்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக பெண்ணின் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதன்படி, சந்தேகநபர் 72 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.