ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒக்டோபர் 21-23 வரை கிழக்கு விஜயம்
காணாமற் போனோரது உறவினர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு
அனைத்து ஆணைக்குழுக்கள் மற்றும் இதர குழுக்களின் தீர்மானங்களை ஆராய்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் மட்டக்களப்புக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமற் போனோரின் உறவினர்களுடன் இவர்கள் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர்.
அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இந்த சந்திப்புகளை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலத்தில் காணாமற்போனோரின் குடும்ப உறவினர்களை சந்தித்து இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஆணைக் குழு மற்றும் குழுக்களின் மூலம் அவர்களுக்கு கிடைத்துள்ள தீர்வு தொடர்பில் இதன் போது கலந்துரையாடுவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மேற்படி ஜனாதிபதி ஆணைக் குழு பிரதிநிதிகள் வடமாகாணத்திற்கு விஜயம் செய்து அங்கு காணாமல் போனோர் தொடர்பில் அவர்களது உறவினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதுடன் விரைவில் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று அங்கு காணாமற்போனோரின் உறவினர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை