சிறுமி துஷ்பிரயோகம்: பிரதேச சபையின் முன்னாள் தலைவர் விடுதலை

14 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 15 வருட கால கடூழிய சிறைத்தண்டனை மற்றும் இரண்டரை இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டிருந்த அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனில், அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ஆட்சேபித்து, சாருவ லியனகே சுனில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் அவரை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுதலை செய்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான பீ.குமாரரத்னம் மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் சாருவ லியனகே சுனிலை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுதலை செய்துள்ளனர்.

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், 2012ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதிக்கும் 2012ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாருவ லியனகே சுனில் குற்றச்செயலை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.