எரிக் சொல்ஹெய்ம் கொழும்பில் ரகசிய சந்திப்பு – அரசாங்கம் வெளியிட்ட தகவல்…..

இலங்கைக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் விஜயம் செய்கின்றமை தொடர்பில் அச்சமடையத் தேவையில்லையெனவும், ஓர் சுயாதீன அரசாங்கம் என்ற வகையில் ஏனைய அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய தேவை இல்லையெனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹெய்மின் இலங்கைக்கான விஜயம் புலம்பெயர் அமைப்புக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய பந்துல குணவர்தன, இராஜதந்திரிகளின் விஜயம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் இலங்கை அனைத்து நாடுகளுடனும் பிரிவினையற்ற வெளியுறவுக் கொள்கைக்கு அமைவாகவே செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

எரிக் சொல்ஹெய்ம் இலங்கை விஜயம்

எரிக் சொல்ஹெய்ம் கொழும்பில் ரகசிய சந்திப்பு - அரசாங்கம் வெளியிட்ட தகவல் | Eric Solheim Secret Meeting In Colombo

 

எரிக் சொல்ஹெய்ம் நேற்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன், பேச்சுக்களையும் முன்னெடுக்கவுள்ளார்.

அத்துடன், இலங்கையில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக உறுதித்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்புவதற்காக வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாக ஆய்வுகளையும் மேற்கொள்ளவுள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தை

எரிக் சொல்ஹெய்ம் கொழும்பில் ரகசிய சந்திப்பு - அரசாங்கம் வெளியிட்ட தகவல் | Eric Solheim Secret Meeting In Colombo

இதேவேளை, நோர்வேயின் இராஜதந்திரியான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான நோர்வேயின் வெளிவிவகார ஆலோசகராக கடந்த 2000 ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் ஏற்பாட்டாளராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் அவரின் செயற்பாடுகளுக்கு தென்னிலங்கையில் சிங்கள பிரதான அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.