ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு முழு பங்காற்றிய நபரே கோட்டாபயவை முட்டாள் என விளிப்பு!

தலைக்கனம் கொண்ட முட்டாள் ஆட்சி செய்ததால், உரமில்லாது, அறுவடையின்றி மக்கள் அழிந்து போயுள்ளதாக தெஹிவளை-கல்கிஸ்சை மாநகர சபையின் முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் கதிவொன்றையும் இட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“தலைக்கனம் கொண்ட முன்னாள் ஆட்சியாளரால், எமக்கு ஏற்பட்டுள்ள நிலைமை, உரமின்றி, அறுவடையின்றி நாம் அழிந்து போயுள்ளோம் எனவும் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

அழிவடையும் தேயிலை செய்கை

ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு முழு பங்காற்றிய நபரே கோட்டாபயவை முட்டாள் என விளிப்பு! | Sri Lanka Government Gotabaya Podujana Peramuna Sl

அதுமட்டுமன்றி தேயிலை பயிர் செய்கை முற்றாக அழிந்து விட்டது. இவை எமக்கு சிறந்த படிப்பினை எனவும் தெரிவித்துள்ளார்.

தெஹிவளை-கல்கிஸ்சை மாநகர சபையின் முன்னாள் மேயரான தனசிறி அமரதுங்க, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வரவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை ஆட்சிக்கு கொண்டு வரவும் முக்கியமான பங்களிப்பை செய்தவர்.

இவ்வாறான நிலையில், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவையே முட்டாள் என அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.