பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம் இன்றைய தினம் கைதடியில் திறந்து வைப்பு!!!

யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட தொகுதியே இன்றைய தினம் காலை 9 மணியளவில் அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த,பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் க.மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். குறித்த கட்டடத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் முழுமையாக பூர்த்தியடையாத நிலையில் கீழ்த்தளம் மாத்திரம் திறந்துவைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.