மைத்திரிக்கு எதிரான விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (14) காலை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு சமுகமளித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்தி, உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு அழைக்கப்படும் வேளையில் முன்னிலையான இவ்வாறு நீதிமன்றுக்கு பிரவேசித்துள்ளார்.

நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான தனிப்பட்ட முறைப்பாடு வழக்கை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் கோட்டை நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளதா எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.