வரம்பற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் விசித்திரமான வரி..! சஜித் எச்சரிக்கை

அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும் போலவே கருத்தியல் ரீதியாகவும் கூட வங்குரோத்து நிலையில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நகர்த்தும் மக்கள் மீது புதிய வரிச்சுமையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்கள் மீது வரம்பற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் விசித்திரமான வரியாக இது மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

ஒரே வழி, வரி அதிகரிப்பு மாத்திரமல்ல

வரம்பற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் விசித்திரமான வரி..! சஜித் எச்சரிக்கை | Sri Lanka Crisis 2022 Sajith Ranil Sjb

அரச வருமானத்தை அதிகரிப்பதற்குள்ள ஒரே வழி, வரி அதிகரிப்பு மாத்திரமல்ல என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,பண்டோரா பத்திரங்கள் மூலம் பெயரிடப்பட்ட நபர்கள் வைத்திருக்கும் டொலர்களையும் நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும் “பிரபஞ்சம்” வேலைத்திட்டத்தின் கீழ் 36 ஆவது கட்டமாக மற்றுமொரு பேருந்து வண்டி, காலி சித்தார்த்த தேசியப் பாடசாலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் இன்று(14) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Gallery Gallery Gallery Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.